
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை (08) குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் பெல்மதுல்ல மற்றும் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 33 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










.jpg)

