
சுங்க வரியைச் செலுத்தாமல் இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 775 கிராம் தங்கம் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, கொழும்பில் மூன்று இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை ஆர்மர் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (16 ) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சட்டவிரோதமாகத் தங்கம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கொட்டாஞ்சேனை பொலிஸாரிற்கு கிடைத்தப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, இச் சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் 30, 45 மற்றும் 50 வயதுடையவர்களென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







.jpg)




