
தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலையைக் கருத்திற்கொண்டு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம் குறித்த எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த எச்சரிக்கை அறிவித்தலானது நாளை (18) மாலை 6 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுகள்:
நிலை 2 - எச்சரிக்கையுடன் இருங்கள் (அம்பர் நிற எச்சரிக்கை):
நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட, வலப்பனை, ஹங்குராங்கெத்த, நில்தண்டாஹின்ன
இரத்தினபுரி மாவட்டம்: எலபாத்த, குருவிட்டை, இரத்தினபுரி
கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்லை, யட்டியாந்தோட்டை
பதுளை மாவட்டம்: ஹப்புத்தளை, பசறை
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை
நிலை 1 - விழிப்புடன் இருங்கள் (மஞ்சள் நிற எச்சரிக்கை):
கேகாலை மாவட்டம்: ருவான்வெல்ல, கேகாலை, தெஹியோவிட்ட, ரம்புக்கனை, வரக்காபொல
குருநாகல் மாவட்டம்: ரிதிகம
கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, தும்பனை, பன்வில, உடுநுவர, தெல்தோட்டை, யட்டிநுவர, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, உடுதும்பரை, அக்குறணை, பூஜாப்பிட்டிய, மெததும்பரை
மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்க கோறளை, உக்குவெல, மாத்தளை
இரத்தினபுரி மாவட்டம்: அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, கலவான, இம்புல்பே, நிவித்திகல, கொலொன்ன, பெல்மதுளை
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ







.jpg)




