
ஆகஸ்ட் 2026 இல் 8.1% ஆகப் பதிவுசெய்யப்பட்ட நாட்டின் பணவீக்க விகிதம், செப்டம்பர் மாதத்திலும் 8.1% ஆகவே மாற்றமின்றி பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு (NCPI) மற்றும் செப்டம்பர் 2026 மாதத்திற்கான அது தொடர்பான மாதாந்திர நுகர்வோர் பணவீக்க விகிதங்களை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வௌியிட்டுள்ளது.
குறித்த தரவு அறிக்கையின்படி, 2 முக்கியத் துறைகளின் பணவீக்க விகிதங்களில் சற்றே எதிர்மாறான போக்கு காணப்படுகிறது.
உணவுப் பிரிவு - ஆகஸ்ட் 2026 இல் 6.6% ஆகப் பதிவுசெய்யப்பட்ட உணவுப் பிரிவின் முதன்மைப் பணவீக்க விகிதம், செப்டம்பர் மாதத்தில் 6.9% ஆகச் சிறிதளவு அதிகரித்துள்ளது.
உணவல்லாத பிரிவு - ஆகஸ்ட் 2026 இல் 9.3% ஆக இருந்த உணவுல்லாத பிரிவின் முதன்மைப் பணவீக்க விகிதம், செப்டம்பர் மாதத்தில் 9.1% ஆகச் சிறிதளவு குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தப் பணவீக்கம் மாற்றமின்றி இருந்தாலும், உணவுப் பிரிவில் ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவில் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிகிறது.












