இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொட, தலுகம பகுதியில் இயங்கிய இவர்களது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அனுமதிப்பத்திரம் கடந்த ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.
இருப்பினும், அதே நிறுவனப் பெயரில் வெலிமடை, நுகெதலாவ பகுதியில் மீண்டும் செயற்பட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறிப் பணம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு எதிராக குறைந்தது 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கணவரை ஒக்டோபர் 26ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


.jpg)










