
பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்பிட்டிதொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருந்தொகையான போதைப்பொருட்கள் மற்றும் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 06 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 250 கிராம் 660 மில்லிகிராம் ஹாஷ் போதைப்பொருள், 74 கிராம் 450 மில்லிகிராம் குஷ் ரக போதைப்பொருள் மற்றும் சுங்கத் தீர்வையற்ற முறையில் கொண்டுவரப்பட்ட 8,800 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் களனிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.







.jpeg)




