வயோதிபர் மீது வாகனம் மோதிய விபத்து – கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி எம்.பி. சந்தன சூரியாரச்சி பிணையில் விடுதலை



பனாகொடை பகுதியில் நேற்று (07) புதன்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை ரூபா 100,000 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பனாகொடை பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற 65 வயதுடைய வயோதிபர் ஒருவர் மீது பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து தொடர்பில் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.