
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் காட்டு யானையொன்று சேற்றுக்குள் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சரிந்து கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யானையின் நிலைமையை உடனடியாக ஆராய்ந்து, அதன் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வயல்வெளிச் சேற்றுப் பகுதியில் குறித்த யானை எழும்ப முடியJாது பல மணிநேரமாகப் போராடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அவசர நிலைமை குறித்து வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும், கால்நடை மருத்துவக் குழுவினரும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமென விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகத் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று, யானையின் உடல்நிலையைப் பரிசோதித்து, அதனைச் சேற்றிலிருந்து பாதுகாப்பாக மீட்டுத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தீவிரமாக வலியுறுத்தியுள்ளனர்.












