அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் மன்னிப்புக் கோரும் ஜனாதிபதி, ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்காதது ஏன்? –உதய கம்மன்பில



அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொது மன்னிப்புக் கோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பௌத்த பிக்குவான ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மறுக்கிறார். ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் பல விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டுக்காக குரல் கொடுத்த ஞானசார தேரர் அரசியல் நோக்கத்துக்காகவே பழிவாங்கப்பட்டுள்ளார். பிக்குகள் அவருக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க போவதில்லை என்று அமைச்சர் லால் காந்த குறிப்பிடுகிறார்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி தான் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். லால் காந்தவிடம் யாரும் மன்னிப்புக் கோரவில்லை. ஜனாதிபதியின் அதிகாரங்கள் அமைச்சர் லால் காந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஜனாதிபதி குறிப்பிட வேண்டும்.

அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொது மன்னிப்புக் கோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பௌத்த பிக்குவான ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மறுக்கிறார்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.இல்லையேல் பல விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தற்போது பொலிஸ் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் போராட்டம் செய்து அதன் ஊடாக ஆட்சிக்கு வந்ததை ஜனாதிபதி மறக்க கூடாது என்றார்.