பிடியாணைக்கு அமைய ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்



சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
 
ஞானசார தேரர் சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைவாக ஆஜர்படுத்துவதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால் ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.