
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (6) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











.jpg)
