
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் (06) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சரண குணவர்தனவின் தண்டனையைக் குறைத்துக் கொள்வதற்காக மேல் நீதிமன்ற நீதிபதியொருவருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட போதே, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











.jpg)
