
நாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெடகொட பகுதியில் அமைந்துள்ள ஜின் கங்கையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாகொடை பொலிஸாருக்கு நேற்று (08) வியாழக்கிழமை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவர் சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் சுமார் 5 அடி உயரமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றும் பச்சை நிற வளையல் ஒன்றும் காணப்படுப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










.jpg)

