கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் எதிர்க்கட்சிகள் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்த போதிலும், அவற்றில் எவையும் வெற்றிபெறவில்லை. எனவே, முதலில் எதிர்க்கட்சியை முறையாக ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்; அதன் பின்னரே நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவருவது குறித்துத் தீர்மானிக்க வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.
உலகவாழ்விட தினத்தை முன்னிட்டு கோட்டை பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாகக் கோட்டை போன்ற பிரதேசங்களில் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. கோட்டைப் பிரதேசத்தில் மாத்திரம் 1,200க்கும் அதிகமான வீடுகளுக்கான தேவை உள்ள நிலையில், பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அரும்யோதய மாவத்தை வீட்டுத் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டு தற்போது 350க்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதுடன்,பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குழந்தைகள் உள்ள வீடுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் வாழ்க்கைச் தரத்தை உயர்த்தவும் விசேட நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மக்கள் செலுத்தும் வரிப்பணமானது நாட்டின் பொதுப் போக்குவரத்து, குடிநீர், உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே முறையான திட்டமிடலுடன் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் எதிர்க்கட்சிகள் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்த போதிலும் அவற்றில் எவையும் வெற்றிபெறவில்லை. பாராளுமன்றத்தில் தனிநபர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்து வீண் விளம்பரம் தேடுவதை விட, எதிர்க்கட்சிகள் தங்களை அரசியல் ரீதியாக பலப்படுத்திக் கொண்டு நாட்டின் மிக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வருவதே பொருத்தமானதாக இருக்கும். மாறாக, நாள்தோறும் ஏதேனும் ஒரு செய்தியை வழங்குவதே அவர்களின் முழுநேர வேலையாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏழாவது ஒப்பந்தம் வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயம்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் அனைத்து பரிந்துரைகளையும் அரசாங்கம் அப்படியே செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு முரணான அல்லது பொதுமக்களுக்குப் பாதகமான விடயங்களை அரசாங்கம் ஒருபோதும் செயற்படுத்தாது என்றும், முதன்மை கணக்கு வரம்புகள் மற்றும் கடன் முகாமைத்துவம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே ஐ.எம்.எஃப். அமைப்புடன் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
எரிபொருளைச் சந்தை விலைக்கு வழங்க வேண்டும் என ஐ.எம்.எஃப். பரிந்துரைப்பதாகத் தகவல்களை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தினாலும், பொதுமக்களுக்குச் சலுகைகள் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் அரசாங்கத்திற்கே உண்டு.
உலகச் சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களால் மின்சாரம், போக்குவரத்து மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து பணவீக்கம் உயர்வடைவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் 47 பில்லியன் ரூபாய் பெறுமதியான சலுகைகளை வழங்குகிறது.
மேலும், இதுவரை காலமும் வழங்கப்பட்ட எரிபொருள் மற்றும் மின்சாரச் சலுகைகள் உயர் வருமானம் பெறுவோருக்கும் கிடைப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் இந்தச் சலுகை முறையைச் சீரமைத்து, போக்குவரத்து, கைத்தொழில் மற்றும் விவசாயம் போன்ற உண்மையான பொருளாதார உற்பத்தித் துறைகளைச் சென்றடையும் வகையில் புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

.jpg)