இன்றைய வானிலை


இலங்கைக்கு அண்மையில் வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படுகின்ற தளம்பல் நிலையானது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையக் கூடும். இதன் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதிலும் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்படும். இதேவேளை நாட்டைச் சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களிலும் இன்று முதல் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்படும்.

ஆனபடியினால் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேவேளை பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும்.

மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையினூடாக காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் மணித்தியாலத்திற்கு 60 - 70 km வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.