நாமலின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்கவுக்குப் பிணை – வெளிநாட்டுப் பயணத்திற்குத் தடை!



இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்கவை பிணையில் விடுவிக்கக் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் பயணத் தடை ஒன்றும் விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் சமர்ப்பணங்கள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆகியோரின் வாதங்களைக் பரிசீலித்த பின்னரே இந்த உத்த ரவை கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம பிறப்பித்துள்ளார்.

குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சொத்துகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.