முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!



முன்னாள் அமைச்சர் ஜி. எல். பீரிஸ், இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, இன்று செவ்வாய்க்கிழமை (20) சற்று முன்னர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

அவர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற கூட்டம் தொடர்பான விசாரணை ஒன்றிற்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.