
குருநாகல் - வெல்லவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ரயில் கடவையினூடாக வீதியை கடக்க முட்பட்ட போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதிரவலான பகுதியில் உள்ள ரயில் கடவையில் நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பில் தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்க விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது 18 மற்றும் 26 வயதுடைய வெல்லவ பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பில் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










.jpg)

