
களுத்துறை, அங்குருவாதொட்ட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான உயிருள்ள துப்பாக்கி ரவைகள் மற்றும் கைவிலங்கு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி T-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய 16 உயிருள்ள ரவைகளும் உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேகநபரைத் தடுப்புக்காவலில் வைத்து மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதன்போது சந்தேகநபரால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, அங்குருவாதொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவர பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக உயிருள்ள ரவைகள் 90, M-16 ரக உயிருள்ள ரவைகள் 23 மற்றும் கைவிலங்கு ஒன்று ஆகியவை நேற்று திங்கட்கிழமை (23) அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





.jpg)






