பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க பாராளுமன்றத்தில் 16 நாள் விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பம்!



பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலினம் சார்ந்த வன்முறையை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் உலகளாவிய 16 நாள் செயற்பாட்டு நடவடிக்கைக்கு இன்று புதன்கிழமை (25) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை ஒட்டி, வன்முறைக்கு எதிரான செய்தியைக் குறிக்கும் விசேடபட்டி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இந்த பட்டியை அணிந்துகொண்டு, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான உலகளாவிய வேலைத்திட்டத்திற்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இந்த சர்வதேச முன்னெடுப்பின் அடையாள நிறமான செம்மஞ்சல் நிறத்தை ஊக்குவிக்கும் வகையில், செம்மஞ்சல் அல்லது அந்நிறத்தை ஒத்த ஆடைகளை அணிந்து ஆதரவு தெரிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம்,பிரதமர் உள்ளிட்ட பெண் பாராளுமன்ற உறுப்பனர்கள் செம்மஞ்சல் நிற ஆடை அணிந்து நேற்று சபைக்கு வந்திருந்ததுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் செம்மஞ்சல் நிற ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.