
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்பை மின் நுகர்வோர் மீது சுமத்த மாட்டோம் என உறுதியளித்தால், அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்பை மின் நுகர்வோர் மீது சுமத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொடவால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவன் போபகே இந்த அறிவிப்பைச் செய்தார்.











.jpg)
