ருவன்வெலிசாயவில் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் சாகும்வரை உண்ணாவிரதம்!



கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மேலும் இரு தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக பௌத்த தேரர்கள் குழுவொன்று ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்ததுடன், அதற்கு மத்தியில் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் இவ்வாறு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.