பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற அமர்வின்போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' தொடர்பில் ஆளுகை, நீதி தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு இன்று கூடி கலந்துரையாடவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7ஆம் திகதி குறித்த சட்டமூலம் தொடர்பில் பொது கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பொது கலந்துரையாடல் நடைபெறுவதற்கு முன்னதாகவே குறித்த சட்டமூலம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்படவுள்ளது.
இந்த விடயம் குறித்து ஆளுகை மற்றும் நீதி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான நாங்கள் சபாநாயகருக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளோம்.பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளோம்.
துறைசார் மேற்பார்வைக் குழு கூடுவதிலோ அல்லது குறித்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதிலோ தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.எனினும், அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் பற்றியே துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்படும். பாராளுமன்றத்தின் ஊடாகவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், 1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. அந்தச் சட்டத்தினால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பாரதூரமானவை.எனவே, பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில் அவசரமாகத் தீர்மானங்களை எடுக்காமல், விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும்.
இந்தச் சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல்களில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றார்.


.jpg)


.jpg)







