மண்முனை கண்ணகை ஓர் ஆய்வு



(ஆரையம்பதி க.சபாரெத்தினம்)
 ”குடமுழுக்குக்காணும் மண்முனை கண்ணகை ஓர் ஆய்வுக் குறிப்பு” மற்றும் ”மண்முனைக் கண்ணகி தொடர்பில் எழும் ஆய்வுச் சிக்கல்கள்”என்ற தலைப்புகளில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவா்களால் 10.05.2016 மற்றும் .22.05.2016 ஆகிய திகதிகளில் www.battinews.com வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த கட்டூரையில் சில முரண்பாடுகளையும் மேறபடி எழுத்தளரால் மேற்கொள்ளப்பட இருக்கும் மண்முனை கண்ணகை பற்றிய எதிர்கால ஆய்வுக்கு பலம் சோ்க்கும் முகமாகவும் தர்கக ரீதியிலான பார்வையோடு இக்கட்டுரை வரையப்படுகின்றது.



முதலில் இவ்வாக்கத்தில் அடங்கியுள்ள முரண்பாட்டுக்கருத்துக்களை அப்படியே ஆக்கத்தில் உள்ளவாறு அவரது வசனங்களில் தொடராக தொகுத்து இனம் கண்போம்.
(அடைப்புக்குறிக்குள் இடப்பட்டிருக்கும் தாழங்குடா என்ற பதம் வாசகர்களின் விளக்கத்திற்காக சேர்க்கப்பட்டதாகும்)

 1. உலகநாச்சி ஆட்சி இருக்கையானது இக்கிராமத்தில் (தாழங்குடாவில்) அமைந்திருந்தமையும் அக்காலம் முதல் இக்கிராமம் மண்முனை என அழைக்கப்பட்டமையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2. உலகநாச்சி ஆட்சி இருக்கையானது அமைந்த இடம் இன்றும் (தாழங்குடாவில்) பெரிய வளவு என்று அழைக்கப்படுவதனையும் அதனை அண்டிய பகுதி மாளிகையடித்தெரு என பதிவு செய்யப்பட்டுள்ளமையும்.

3.மண்முனைக்கு முதன் முதலில் கண்ணகைக்கு கோவில் எடுத்த தன்மையில் அது (தாழங்குடாவில் ) மண்முனை கண்ணகையாக நிலைநிறுத்தப்பட்டதையும் கூடவே அங்கு பாடப்படுகின்ற காவியம் மற்றும் உடுக்குசிந்து எனபவற்றின் மூலம் அங்கு அருள்பாலிக்கும் கண்ணகையே மண்முனைக் கண்ணகை எனவும் அவா்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

4.தொடக்கத்தில் அழகிய பேழையுடன் கூடிய கண்ணகி விக்கிரகம் அங்குள்ள(தாழங்குடாவில்)வீரையடி நிழலில் ஓர் மூதாட்டியால் சிறாம்பியமைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்ததாகவும் பின்பு அங்கிருந்த பேழை களவாடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

5.குறித்த அந்த பேழை தற்போது எங்குள்ளது என வினாவியதற்கு அவா்கள் ”தெரியவில்லை” என்று கூறுகின்றனா்....

விளக்கக் குறிப்புகள்  - 1
போத்துக்கேயா் காலமான 1627 இல் மண்முனை இராசதானியும் அங்கு அமைக்கப்பட்டிருந்த காசிலிங்கேஸ்வரா் ஆலயம் முதலான இந்து வழிபாட்டு தலங்களும்  முற்றாக அழித்தொழிக்கப்பட்டன என்பது வரலாற்றுச்செய்தி. அந்த வகையில் கண்ணகை வழிபாட்டுடன் தொடர்புபட்ட இந்தப் பேழை அடியாள் ஒருவாின் பக்தி முயற்சியினால் அழிவுற்ற இடத்திலிருந்து காப்பாற்றப்பட்டு  அது மறைத்த்து வைக்கபட்டிருக்கலாம்  அவ்வாறு மறைவில் ஒழிந்திருந்த பேழை மூதாட்டியின் முயற்சியால் அல்லது அல்லது பிறா் மூலம்  இவரது  கைகளுக்கு பாரிமாறப்பட்டிருக்கலாம்  என்ற இந்த ஆய்வுகருத்துகளோடு முன்செல்வதற்கு முன்பாக வெல்லாவுர் கோபால் அவா்களின் ஆக்கத்தில் தரப்பட்டுள்ள மற்றும் சில இணக்க கருத்துக்களையும் இங்கே குறிப்பிடுதல் அவசியமானதே.
i.  குறித்த மூதாட்டி தனது வறுமையின் நிமித்தம் ஒரு செல்வந்தருக்கு விற்றுவிட்டதாக தனது முன்னோர்கள் வாயிலாக அறியப்படுவதாக வேறு சிலா் கூறுகின்றனா்.
ii. இதில் தாழங்குடாவில் அக்காலத்தில் பேழை மாத்திரம் இருந்தாகவும் அதுவே ஆரையம்பதிக்கு இடம் மாறியதாகவும் கொள்ளப்படுமாயின்.......

விளக்கக் குறிப்புகள்  - 2
போர்த்துகேயா் காலத்தில் இலங்கையில் சுதேச வணக்கங்களுக்கு கடுமையான தடைவிதிக்கப்பட்டிருந்தது வழிபாடுகளை இயற்றுவவோர் கடுமையாக தண்டிக்கப்பட்ட நேரம் அது, இதனால் சுதேச சமயங்களான இந்து மதம் பௌத்தம் என்பன முற்றான மறைக்கபட்டிருந்தது. இந்த முரண்பாடு விடயத்தில் சம்பந்தப்படும் ஊா்களான தாழங்குடா, மண்முனை ஆரையம்பதி(ஆரைப்பற்றை) என்பவற்றின் வகிபாகங்களை நடுநிலையில் நின்று காலக்கிரம வாிசைப்படி ஆய்வு செய்யப்படின் பெரும்பாலான குளறுபடிகளுக்கு எளிதான விடைகிடைத்துவிடும். அதனை விடுத்தது எனது ஊா், எனது மக்கள் என்ற மனப்பான்மையில் ஓவ்வருவரும் அவரவருக்கு ஏற்ற வகையில் ஆய்வினை திசை திருப்பி பக்கச்சார்பான தீர்மானங்கள் எடுக்க துணிந்தால் உண்மை நிலை என்றுமே உணரப்படாமல் மறைந்தே கிடக்கும். கட்டடுரையாளா் சிற்சில இடங்களில் தனது நிட்சயமற்ற நெகிழ்சி தன்மையை வெளிப்படுத்துவது உண்மை நிலைக்கு உயிரரூட்டுவதாக அமைகின்றது.
மண்முனை குறுநிலத்தை அங்கு அரசியியற்றிய இளவரசி உலகநாச்சியாரை ஓரளவுக்கு எடுத்தியம்பும் நுால் மட்டக்களப்பு மான்மியம் மட்டுமே. இந் நுாலில் அவரது வருகை குறித்து பேசுகையில் தாழங்குடா கடற்கரையில் பாய்மர கப்பல் மூலம் திசைமாறி வந்து கரைதட்டிய பின்னர் அவ்வழியே கொக்கட்டி மரங்கள் சோலையாக வளர்ந்திருந்த மண்திட்டு முனையை நோக்கி நடந்து சோ்ந்து அங்கே ஒரு குடியேற்றத்தை நிறுவி ஆட்சிசெய்து வந்தாள் என்றே கூறப்பட்டுள்ளது கரைதட்டிய இடத்தை சாியாக படம்பிடித்தாற்போல் கூறுவதற்கு அன்றைய காலகட்டத்தில் வெறும் சன நடமாட்டம் இல்லாத தாழைமரக்குடா ஒன்று மட்டுமே சான்றாக இருந்தபடியால் வெறுமனே தாழங்குடா என்று மொழிந்திருக்கலாம். அதாவது தாழைமரங்கள் வளர்ந்திருந்த நீர்க்குடா  என்ற பொருளில் அழைக்கபட்டிருக்கலாம். இதன் அர்த்தம் மக்கள் வாழ்ந்த ஓா் கிராமம் அது என்று துணிவதற்கு இடமில்லை.

மக்கள் வசிக்காத நிலப்பகுதி ஒன்றை கேட்டே அவ்விடத்தை நிந்தகமாக பெற்றுக்கொண்ட உலகநாச்சி அப்போதைய நிலையில் வேறு எவ்வாறுதான் அதனை அடையாளப்படுத்தியிருக் முடியும். அத்தோடு அவர் அக்குடாப்பகுதியை கடந்து சென்று கொக்கட்டி மரங்கள் வளா்ந்திருந்த மணல்முனையான மண்முனை என்பது கூட அப்போது ஓர் ஊரை மையப்படுத்துவதற்கான பெயரன்றி இடத்தை அடையாளம் காட்டும் சொல்லாகவே அமைந்திருந்தது. இத்தனை கட்டங்களையும் எண்ணிப்பாராமல் தாளங்குடா என்று மான்மீயத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதை மட்டும் வைத்து கொண்டு அதுவே இன்றைய தாழங்குடா கிராமம் என அர்த்தம் கொள்வதில் தவறுண்டு.

ஆகவே மேலே குறிப்பிடப்படும் முரண்பாட்டுக்கருத்து 01 இல் தெரிவிக்கப்படும் கூற்றுப்படி தாழங்குடாவையே மண்முனை என்று அழைக்கப்பட்டதென்பதான கருதுகோள் அர்த்தமற்றதாகும்.

முரண்பாட்டுக்கருத்து 02 இல் கூறப்பட்டுள்ள படி இன்றைய தாழங்குடாவில் ”பெரிய வளவு” என்ற இடமே உலகநாச்சியாரின் அமைந்த இடம் என்று கற்பிக்கப்படுவதற்கும் அதாரங்கள் போதுமானதாக இல்லை.  ஓரு பெரும் நிலப்பரப்பு தொடர்ந்தும் வெறுமையாக வைக்கப்பட்டிருப்பதும் அதனை புனித இடமாக நோக்குவதும் அத்துடக் அப்பகுதியில் உள்ள வீதி மாளிகையடிதெரு எனப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் மட்டுமே முழுமையாக அந்ந அர்த்தத்தை வெளிக்கொணரும் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள இயலாது. மாறாக அதனை மாளிகையடிக்கு கொண்டு செல்லும் பாதை என்ற புரிதலையும் ஏற்படுத்தும் அல்லவா?  திருகோணமலை வீதி என்று மட்டக்களப்பில் உள்ள பாதைப்பெயரால் அவ்விடம் திருகோணமலை ஆகிவிடுமா என்ன ?

முரண்பாட்டுக்கருத்து - 3 ல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் மிகவும் பாரதுாரமான ஓன்றாகும் . மண்முனை, தாழங்குடா என்று அமைந்த இரு வெவ்வேறு குக்கிராமங்களையும் ”இதுதான் அது, அதுதான் இது” என்று ஆதாரபுர்வமற்ற நிலையில் கூறப்படும் கூற்று முற்றாகவே விடயத்தை இருட்டடிப்பு செய்யப்படுவதாக அமைகின்றது. அன்றியும் மண்முனையில் இராசதானி அமைவுற்றிருந்ததனால் இன்றும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மண்முனைப்பற்று, மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு என மண்முனை என்ற குறியீட்டுடன் ஆக பெயரிடப்பட்டுவருகின்றன. தாழங்குடாவை மையப்படுத்தி இவற்றிக்கு பெயரிடப்படாதது ஏன்? இராசதானி அமைந்திருந்த மண்முனைக்கு சேய்மையில் தாழங்குடா ஓா் குக்கிரமமாக அமைந்திருப்பதனால் அதுவே மண்முனை ஆகி விடுமா?

முரண்பாட்டுக்கருத்து -04 மற்றும் 05 இல் கூறப்படுகின்ற விடயங்களில் தாழங்குடா மற்றும் ஆரையம்பதி மக்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளும் இயல்பு அதிகம் இருப்பது உண்மையே ஆகினும் அதில் தெரிவிக்கப்படும் ”பேழை களவாடப்பட்டது” (இவ்விடயம் மிக மிக  பாரதுாரமான ஓன்றாகும்)என்ற விவகாரத்தில் இறுதியில் தற்போது எங்குள்ளது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தெரியாது என்ற மாதிரி சூசகமாக பதில் கூறப்படடுவது முரண்பாடுகளை மேலும் சிக்கலாக்கும் செய்தியாக அமைகின்றது. ஆயினும் கிழே நாம் இனம்கண்ட இசைவான கருத்துகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கும்போது மூதாட்டியார் அதனை விற்றுவிட்டதாக சொல்லப்படும் விடயம் தெளிவாகின்றது.

சிறாம்பிகட்டி தன் அரவணைப்பில் அன்போடு புசித்து வந்த தெய்வீக அம்சம் பொருந்திய விக்கிரகத்தை காசுக்கு விற்றுவிட்டா் என்பதும் ஓர் அசாதாரண நடவடிக்கையாகும் அன்றியும் அவா் விற்று விட்டதாக சொல்லப்படும் போது அதனை கொள்முதல் செய்தவா் நிசமகவே ஓர் ஆண்மீகத்தொண்டன் அத்தோடு சமூகத்தில் அந்தஸ்து மிக்கவராக திகழ்ந்திருக்கின்றார். வறுமையின் நிமித்தம் மூதாட்டி அப்பேழையை விற்கவேண்டும் என்றிருந்தால் அதனை இலகுவாக செய்திருக்க கூடிய வழிவகைகள் பல உள்ளன. அதனால் இவ்விடயத்தில் பல சந்தேகங்கள் எழுவது நியாயம் தானே?
1. குறித்த செல்வந்தரை மட்டும் பல நாட்கள் தேடிக்காத்திருந்து  மூதாட்டி அலைந்திருக்க வேண்டியது இல்லை.
2. எவர்ஓருவா் அதற்கான பெறுமதியை கொடுக்கின்றாரோ அவருக்கே அதனை இலகுவாக விற்றுக்காசாக்கி இருக்க முடியும்.
3.குறித்த செல்வந்தர் அப்பகுதியில் ஆன்மீகவாதி என்பதை நன்கு அறியாது இருப்பின் அவரிடமே சென்று கையளிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
அகவே மூதாட்டி பணத்திற்காக அப்போழையை விற்றுவிட்டா் எனும் கூற்று சாியானதல்ல.  மூதாட்டி தன் பாதுபாப்பில் வைத்திருந்த பேழையை ”பெருத்தமாவரைத் தேடி ஓப்புவித்தார்” எனபதே பொருத்தமானதாகும். அத்தோடு பேழை களவாடப்பட இல்லை விரும்பியே ஓப்படைக்கப்பட்டது. அவ்வாறு இல்லாவிட்டால் முதாட்டியை சார்ந்த சமூகம் சும்மா விட்டு வேடிக்கை பாத்திருக்குமா? என்ற நியாயமான காரணங்களுக்கு விடைபகரவேண்டியிருக்கும்.
முரண்பாட்டுக்கருத்து - 4 இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தொடக்கத்தில் அழகிய பேழையுடன் கூடிய கண்ணகி விக்கிரகம் அங்குள்ள வீரையடி நிழலில் மூதாட்டியால் சிறாம்பியைமைத்து வழிபாடு செய்யப்பட்டது என்ற செய்தி மூலம் நாம் ஊகிக்க முடிவது இவைதான்.

ஆய்வுக்குட்படுத்தப்படும் மண்முனை கண்ணகி ஆரம்ப காலத்தில் சிறாம்பி ஒன்றிலே மூதாட்டியின் ஆளுமைக்கு மட்டுமே உட்பட்டிருந்தது அதாவது பேழையின் உரிமை மூதாட்டிக்கே ஏகபோகமானதாகும். பேழை மூதாட்டிக்கு எவ்வாறு கிடைக்கப் பெற்ற தென்ற கேள்விக்கான விடை தெரியவில்லை. ஆய்வில் தெரிவிக்கப்பட்டவாறு கைதைநகரில் சேரன் செங்குட்டுவன் சிற்பகலையுடன் கூடியதான சுவா் எழுப்பப்பட்ட கோயில் கி.பி 885 தெடக்கம் பராமரிக்கப்பட்டுவந்நதென்பது எங்கனம் என்ற ஐயப்பாடு பேழையைப் பெற்றுக்கொண்ட பெரியவா் சின்னவாத்தியார் என்றழைக்கப்பட்ட சின்னத்தம்பி கணக்குப்பிள்ளை  என்பது மறைமுகமான உண்யைாகும். இவா்காலம் 1850 - 1914 என்ற வரையறையாகும். ஆகவே குறித்த இந்த கைதைநகரில் ஆரம்பிக்கப்பட்ட கண்ணகி கோயிலும் இந்த கால வரைக்க உட்பட்டதென்று தெளிவடைவதைத்தவிர வேறு என்ன செய்ய ? கி.பி 885 என்ற கூற்றை 1885 என்று மாற்றப்பட்டால் ஆய்வு திருப்தியாக நிறைவெய்தலாம்.