பல்கலைக்கழக நிதியை தனது வீட்டு பராமரிப்பிற்கும் கட்டணங்களை செலுத்தவும் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினராக நேற்று பதவியேற்ற தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டொக்டர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒலுவில் பல்கலைக்கழக துணைவேந்தராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை கருத்திற் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உயர்க்கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இஸ்மாயில், பல்கலைக்கழக நிதியை தனது வீட்டு பராமரிப்பிற்கும் கட்டணங்களை செலுத்தவும் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிப்பட்ட ரீதியில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருடனோ அல்லது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியுடனோ தனக்கு எவ்வித முரண்பாடும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.