மண்முனை மேற்கு பனையறுப்பான் கிராமத்தில் யானைகளின் அட்டகாசம்! நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர்


(விளாவூர் நிருபர்)
காஞ்சிரங்குடா - பன்சேனை பிரதான வீதியில் பனையறுப்பான் கிராமத்தில் 02/06/ 2018 நள்ளிரவு வேளையில் மக்கள் குடியிருப்பு இடங்களில்யானைகள் புகுந்து சேதம் விளைவித்தன,

கு.தருமேஸ்வரன், கு.புவனேஸ்வரன் ஆகிய சகோதரர்களின் குடியிருப்பு குடிசையுட்பட, தென்னங் கன்றுகளின்  குருத்து ஓலைகள், மரவள்ளிகளையும் முற்றாக சேதமாக்கப்பட்டிருந்தன இதனை நேரில் சென்று தவிசாளர் செ.சண்முகராஜா, உறுப்பினர் ச.மோகன் இருவரும் பார்வையிட்டனர்.

அதன் அடிப்படையில் வீட்டு உரிமையாளர்களை வினாவிய போது தாங்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியதாகவும் இன்றுடன் மூன்று தடவைகள் ஒவ்வொரு ஆண்டும் வந்து சேதப்படுத்துவதாகவும் கூறினார்கள் இருந்தும் யாரும் இதனை கண்டும் காணதவர்கள் போல்தான் இருக்கிறார்கள்.
இந்த காட்டு யானைகளின் அட்டகாசங்கள் எப்போது தீரும் என்ற கேள்விகளை பொதுமக்கள் தவிசாளர், உறுப்பினரை பார்த்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தவிசாளர் செ.சண்முகராஜா அவர்கள் கூறியதாவது.  தாந்தாமலைப்பகுதிகளால் தான் காட்டு யானைகள்  வந்திருக்க வேண்டும். அங்கே யானை வேலி அமைப்பதில் சில குறைபாடுகள் இருக்கலாம் என்றும் இவை சம்பந்தமாக உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவற்றுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் கதைத்து நிவாரணங்களை பெற்றுத்தருவதாகவும்உறுதியளித்தார்.

மேலும் கூறுகையில் காட்டு யானைகளை விரட்டுவதற்கு கடந்நத பதினைந்து நாட்களுக்கு முன்புதான் வனஜீவராசிகள் திணைக்கள மட்டக்களப்பு அலுவலகத்திற்கு எழுத்து மூலமான கடிதம் மூலம் வெடிப் பொருட்கள் கேட்டிருந்தேன் இதுவரையும் எந்த விதமான பதிலும் அவர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கவில்லை என்றும் தெதிவித்தார்.