மட்டக்களப்பு , ஏறாவூர், மீராவோடை உட்பட நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு 152 அம்பியூலன்ஸ் வாகனங்கள்

( அஸ்மி )
மட்டக்களப்பு , ஏறாவூர், மீராவோடை உட்பட நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு 152 அம்பியூலன்ஸ் வாகனங்கள் நேற்று கையளிக்கப்பட்டன. 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் அவற்றை உரியவர்களிடம் வழங்கி வைத்தனர். 

கொழும்பு மாநகர சபை முன்றலில் கையளிப்பு வைபவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. 
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அம்பியுலன்ஸ் வாகனங்களை அதற்கான முயற்சியை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா பெற்றுக் கொண்டார்.

 இன்று மாலை நிந்தவூரில் வைத்து கிழக்கு மாகாணத்துக்கான 11அம்பியுலன்ஸ் வண்டிகளும் வைத்தியசாலைகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும், இதன்போது சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.