புலம் பெயர் மக்களின் பங்களிப்பு என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கு நிகழ்வு




மு.கோகிலன்

இலங்கையில் போருக்கு பின்னரான சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கு இன்று சனிக்கிழமை (19) மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியில் உள்ள புலைய வெளி கிராமத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு பிரித்தானியாவின் புலம் பெயர் இலங்கைக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

புலம் பெயர் அமைப்புக்கள் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதில் இருக்கக் கூடிய விடயங்கள்,இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பெயர் தமிழரிடம் எதிர்பார்ப்பது என்ன. என்பன போன்ற இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் வளவாளர்களினால் சிறப்புரையாற்றப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன்,மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ம. உதயகுமார்,இலங்கைக்கான புலம்பெயர் அமைப்பின் செயலாளர் இ.ஜெயதேவன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அரச திணைக்கள அதிகாரிகள், சிவில் அமைப்புக்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரெத்தினம் சீவகன் இந் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டார்