மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது




சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ,விற்பனையில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக அதிகாரி தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை ,நிலையங்களையும் தடை செய்யும் வகையில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக பொறுப்பதிகாரி த. தயாலீஸ்வரகுமார் தெரிவித்தார்

இதன் கீழ் மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக அதிகாரிகளுக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலுக்கு அமைய மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கும்புறுமூலை பகுதியில் மதுவரி அத்தியட்சகர் அலுவலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் கீழ் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 41 ஆயிரத்து 50 லீட்டர் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப் பட்டுள்ளதுடன் ,விற்பனையில் ஈடுபட்ட ( பிரான்ஸ் நாட்டு பிரஜை ) வெளிநாட்டு நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக பொறுப்பதிகாரி த. தயாலீஸ்வரகுமார் தெரிவித்தார்

மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக உத்தியோகத்தர்களினால் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் , கைது செய்யப்பட வெளிநாட்டு பிரஜையையும் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக பொறுப்பதிகாரி தெரிவித்தார்

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த நபருக்கு எதிராக தண்டபனமாக 50 ஆயிரம் ரூபா செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் , குறித்த நபர் விடுதலை செய்யுமாறு உத்ததவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலக பொறுப்பதிகாரி த. தயாலீஸ்வரகுமார் தெரிவித்தார்