சிறந்த முன்பள்ளி பாடசாலைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு




முன்பள்ளி பாடசாலைகளுக்கான அடிப்படைத் தகமைகளை சிறந்த முறையில் செயல்படுத்திய சிறந்த முன்பள்ளி பாடசாலைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இயங்குகின்ற முன்பள்ளி பாடசாலைகளின் முன்பள்ளி பாடசாலைகளுக்கான அடிப்படைத் தகமைகளின் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது .

இதன் கீழ் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய முன்பள்ளி சிறார்களின் போசாக்கு உணவு பழக்க வழக்கத்தினை மேம்படுத்தல் ,முன்பள்ளி சிறார்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் இடையிலான தொடர்பாடல் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுடன் முன்பள்ளி சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள், ,பாடசாலை வீட்டுத்தோட்டம் ,பாடசால கட்டமைப்பு அபிவிருத்தி ,கற்றல் கற்பித்தல், சுகாதாரம் போன்ற அடிப்படை செயல் திட்டங்கள் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டன

இந்த தகமைகளின் செயல்பாட்டினை சிறந்த முறையில் செயல்படுத்திய முன்பள்ளி பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட சிறந்த முன்பள்ளி பாடசாலைகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை மேற்கு குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது

வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட 11 பாடசாலைகளில் வவுணதீவு விபுலானந்தா முன்பள்ளி முதல் இடத்திற்கும் கொத்தியாபுலை சரஸ்வதி முன்பள்ளி இரண்டாம் இடத்திற்கும் , கரையாக்கன்தீவு விநாயகர் முன்பள்ளி மூன்றாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது

விருது வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ் .சசிகரன் , மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வி .முரளிதரன், மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் பிரதி கல்விப் பணிப்பாளர் ஹரிகரன் ,மண்முனை மேற்கு முன்பள்ளி பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் கணேஷ் ,மண்முனை மேற்கு பிரதேச முன்பிள்ளை பருவ வவுணதீவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் விஜெகுமார் ,வவுணதீவு பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எ ஜே .சியாம் ,நிறுவன திட்ட முகாமையாளர் திருமதி . நிலக்ஷி தவராஜா , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட இணைப்பாளர் மாரி இவாஞ்சலின் , நிறுவன உதவி திட்ட இணைப்பாளர் ஜெரோம் செல்லர் வவுணதீவு அபிவிருத்தி நிறுவன சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் கே .யசோதரன் , முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்