தினமும் வேகமாக நடப்பதால் கிடைக்கின்ற ஏழு நன்மைகள்



பல்வேறு பிரச்சினைகள் நம் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி வட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில தீர்க்கக் கூடிய வகையில் இருக்கும். சில என்னதான் செய்தாலும் தீரவே தீராத நிலையில் இருக்கும். குறிப்பாக உடல் அளவில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பல மிக எளிமையான வழியில் தீர்க்கக் கூடியதாக இருக்கும்.

நாம் உண்ணும் உணவு முறை முதல் வாழ்கின்ற வாழ்க்கை முறை வரை நமக்கு உதவும். உடல் நலத்தை ஆரோக்கியமாக வைக்க வேகமாக நடந்தாலே போதும் என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன. வேகமாக நடப்பதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் சென்றால் கூட பைக்கில் செல்லும் வாழ்க்கை முறை வந்து விட்டது. ஆனால், இது மிக மோசமான தாக்கத்தை மனித வாழ்வில் உண்டாக்கி விடும். காலால் நடந்து செல்வதுதான் உடலுக்கு ஆரோக்கியம். பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு கால்களால் செல்வதே சிறந்த பலனைத் தரும்.

கால்களால் மெதுவாக நடப்பதை விடவும் சற்று வேகமாக நடப்பது பல்வேறு நன்மைகளை உண்டாக்கும். இது மூளையின் திறனை அதிகரித்து ஞாபகத் திறனை சிறப்பாக வைக்கிறது. மேலும், உங்களை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக வைக்க வேகமாக நடக்கும் முறை உதவுகிறது.

வேகமாக நடப்பதால் உடல் எடை குறையத் தொடங்கும். மிகப் பெரிய பயிற்சிகளை செய்யாமல் இது போன்ற சாதாரண பயிற்சிகளால் உடல் எடைக்குத் தீர்வைத் தரலாம். உடலில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகளும் இதனால் குறையும்.

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உங்களை எளிதாகக் காப்பாற்ற இந்த வேகமாக நடக்கும் பயிற்சி உதவுகிறது. வேகமாக நடந்தால் இரத்த அழுத்தத்தைக் குறைத்து மனஅழுத்தம் இல்லாமல் இருக்கலாம். அத்துடன் இது புத்துணர்வையும் தரக் கூடும்.

வேகமாக நடப்பதால் எலும்புகள் வலுப் பெறும். மூட்டுவலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களைக் காக்க வேகமாக நடந்தாலே போதும். எலும்புகளுக்கு அதிக வலிமையை தந்து எப்போதுமே உத்வேகத்துடனே உங்களை வைத்துக் கொள்ளும்.

கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த வேகமாக நடக்கும் முறை உதவுகிறது. மேலும் இதனால் இதய நோய்களைத் தடுக்க முடியும். நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளைப் பெற வேகமாக நடப்பதே ஒரே வழி.

உடல் ஆரோக்கியத்தைக் காக்க இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. மாறாக இது போன்ற எளிய பயிற்சிகளை செய்து வந்தாலே போதும். வேகமாக நடப்பதால் உடல் ஆரோக்கியம் கூடும். மெதுவாக நடப்பதால் எந்தவித பயனும் பெரிதாகக் கிடையாது. ஆதலால், இன்றிலிருந்து வேகமாக நடக்கப் பழகுங்கள்.