சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது ; பெருந்தொகை பணம் மீட்புசூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆறு பேர் 7 ,52,270 ரூபா பெறுமதியான பணத்துடன்
மட்டக்களப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில்சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளுக்குகிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மட்டக்களப்பு தலைமையக பிரதான பொலிஸ்பரிசோதகர் தயாள் தீகா வதுற வின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டசுற்றிவளைப்பின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 7,52,270 ரூபா பணமும் சூதாட்டத்திற்கு பாவிக்கப்பட்ட பொருட்களும்
கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

சூதாட்டத்தில் ஈடுபட்டத்தாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை ,கல்முனை ,, ஆறையம்பதி, கல்லாறு , சாய்ந்தமரு , மட்டக்களப்பு புதூர் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதேவேளை மட்டக்களப்பு பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் தப்பி சென்றுள்ளதாகவும் , தப்பி சென்றுள்ளவரின் கையடக்க தொலைப்பேசி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் , தப்பி சென்றுள்ளவரின் தொடர்பான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிசாரினால்மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் , நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக எதிர் வரும் திங்கள் கிழமை மட்டக்களப்பு நீதவான நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தயாள் தீகா வதுற தெரிவித்தார்