மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி
மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 2019 ஆண்டுக்கான கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை நடைபெற்றது 

மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழகத்தின் 2019 ஆண்டுக்கான கிரிகெட் சுற்றுப்போட்டியின் அணிக்கு பத்து பேர் கொண்ட ஆறு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிகெட் மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று பிற்பகல் மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக மைதானத்தில் மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக தலைவர் எம் .மனோரஞ்சன் தலைமையில் நடைபெற்றது 

மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்ட அணிகளில் இறுதி போட்டிக்கு தெரிவான கதிரொளி ப்ழு (blue)  ஷார்க் அணியும்  கதிரொளி இஸ்டிகேர்ஸ் அணியும் மோதிக்கொண்டன 

இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய கதிரொளி ப்ழு (blue)  ஷார்க் அணியினர் ஆறு ஓவர்கள் முடிவில் நான்கு விக்கட்டுக்கள் இழந்தநிலையில் 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கதிரொளி இஸ்டிகேர்ஸ் அணியினர் ஐந்து ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 25 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

இறுதி போட்டியில் மோதிக்கொண்ட அணிகளில் கதிரொளி ப்ழு (blue)  ஷார்க் அணியினர் 48 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று 2019 ஆண்டுக்கான மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது .

மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 2019 ஆண்டுக்கான கிரிகெட் சுற்றுப்போட்டியில் கொண்ட அணிகளில் முதலாம் இடத்தினை கதிரொளி ப்ழு (blue)  ஷார்க் அணியினரும் இரண்டாம் இடத்தினை கதிரொளி இஸ்டிகேர்ஸ் அணியினரும்  மூன்றாம் இடத்தினை கதிரொளி பவர் கிங் அணியினரும் நான்காம் இடத்தினை கதிரொளி சுப்பர் கிங் அணியினரும் பெற்றுக்கொண்டனர்

மட்டக்களப்பு மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழகத்தின் 2019 ஆண்டுக்கான மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களாக தெரிவு செய்யப்பட வீரர்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது 

வெற்றிக்கிண்ணங்கள் வழங்கும் இறுதி நிகழ்வில் மட்டிக்களி துரோபதை அம்மன் ஆலய தலைவர் ஜி .ஜமேகரன் மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக ஆலோசகர் இரா . இராஜதேவன்  மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக மூத்த உறுப்பினர் என் .லோகநாயகம் ரெயின்கோ விளையாட்டுக்கழக உறுப்பினர் ஆர் .பிரகாஸ்  மற்றும்  மட்டிக்களி கதிரொளி விளையாட்டு கழக அணிகளின் வீரர்கள் கலந்துகொண்டனர்