மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் நியமனம்



கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய வன்னியசிங்கம் வாசுதேவன் உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மாணிக்கம் உதயகுமாரின் பரிந்துரைக்கமைய உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மண்முனை வடக்கு மட்டக்களப்பு நகர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு கடந்த வெள்ளியன்று இப்பிரதேச செயலக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

1999ல் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமானி பட்டதாரியாக பட்டம்பெற்று ஆசிரியர் சேவையில் ஏழு வருடங்கள் கடமையாற்றிவிட்டு உணவு திணைக்களத்தில் களஞ்சிய பொறுப்பாளராக கடமையாற்றிய நிலையில் 2003ல் நிருவாக சேவையில் இணைந்து கல்முனை தமிழ்பிரிவு, களுவாஞ்சிகுடி மட்டக்களப்பு மாவட்ட செயலகம். ஆரையம்பதி, வாழைச்சேனை பகுதிகளில் உதவி செயலாளராகவும் பின்னர் பிரதேச செயலாளராகவும் 16 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.