பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய புதிய கட்டடத் திறப்பு விழாபட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா
(மண்டூர் ஷமி )

கல்வி அமைச்சின் 39.425 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ்''அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை'' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா வலய கல்விப் பணிப்பாளர் ந.புள்ளநாயகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களின் பாண்டு வாத்திய இசையுடன் பிரதான வீதியூடாக வரவேற்கப்பட்டனர்.இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக பிரதம அதிதியாக முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட கல்வி அமைச்சின் இணைப்பாளரும், படடிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் தேசிய கடதாசின் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி கி.புண்ணியமூர்த்தி மற்றும் கிழக்கு மாகாண என்.எஸ்.வி.எஸ் பொறியிலாளர் ரி.அருள்ராஜ்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜீ.யு.ஐ.உபுல் குணவர்த்தன மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்இஅதிபர்கள்,ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் நடன ,இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.