எழுத்தறிவும் நீண்டு நிலைக்கக் கூடிய சமூகமும் எனும் கருப்பொருளில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் நிகழ்வுகள்.

 (சித்தா)
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதியில் அமையப்பெற்ற எழுத்தறிவு தினத்தின் கருப்பொருள்களாக இம்முறை அமைவது 'எழுத்தறிவும் நீண்டு நிலைக்கக் கூடிய சமூகமும்' என்பதேயாகும். இந் நிகழ்வினை போஷிக்கும் வகையில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக முறைசாரக் கல்விப் பிரிவு பல்வேறு நிகழ்வுகளை நடாத்தியது. இவ் வகையில்  பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி – புள்ளநாயகம் அவர்களின் தலைமையில் முறைசாராக் கல்விப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி செ.நடராசதுரை மற்றும் திட்ட உதவியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை நடாத்தியதுடன் 
' நாளைய உலகின் ராஜாக்கள் இன்றைய மாணவர்களே' 'ஏழை என்பவர் எழுத்தறியாதவர்' 'உடைமை என்பது கல்வியுடைமை' 'பிள்ளைகளை முறையாகப் பாடசாலைக்கு அனுப்புவோம்' எனும் வாக்கியங்களுடன் கல்வி அறிவினால் ஒருவரது உடல்,உள நலன் மட்டுமன்றி நீதி, சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் போன்ற ஜனநாயகப் பண்புகள் நிறைந்த கண்ணியமான வாழ்க்கை முறையினை உருவாக்க முடியும். அவ்வாறான ஒரு சமுதாயமே தேசத்திற்கு மகுடமாகும். 
கற்றலுக்கான தடைகளை நீக்கி, அவ்வாறான ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டுமாயின் 'அனைவருக்கும் கல்வி' என்ற கல்விக் கோட்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்த அனைவருமே சிறந்த பங்களிப்பினை வழங்கவேண்டும். எனும் விடயங்கள் அடங்கிய எழுத்தறிவு தினக் கையேடும் வழங்கி வைக்கப்பட்டது.