புதூர் நூலகம் மற்றும் பாலர் பாடசாலைக் கட்டிடத் தொகுதிக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புறநகர் பகுதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் கருத்திட்டத்தின் கீழ் புதுநகர் பாலர் பாடசாலைக் கட்டிடத் தொகுதிக்கான முதற்கட்ட பணிகள் இன்று (11.09.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதனடிப்படையில், பாலர் பாடசாலை மற்றும் நூலகம் என்பவற்றினை உள்ளடக்கிய கட்டிடத் தொகுதியின் உள்ளக அமைப்புக்கள் மற்றும் எல்லைச் சுவர் உள்ளிட்ட வேலைகளுக்காக கிழக்கு மாகாணசபையினால் 2 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுநகர் வட்டாரத்திற்கான மாநகர சபை உறுப்பினர் இரா.அசோக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர் ம.ரூபாகரன், மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், தொழிநுட்ப உத்தியோகத்தர் ராஜகுமார், றிஷ்வான் மற்றும் புதுநகர் மாநகர பாலர்; பாடசாலையின் ஆசிரியர், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தனர்.