8 வது ஜனாதிபதி தேர்தலும் வாக்களிப்பின் முக்கியத்துவமும் ! வாக்களிக்கும் முறை

ஆர்.சயனொளிபவன் & TEAM 
  • பிந்திய ஜனாதிபதி தேர்தல் கள  நிலவரம்
  • மக்கள் செல்வாக்கு உள்ள ஜே.வி.பி மூன்றாவது அணியாக....
  • மாதிரி வாக்குச்சீட்டும் வாக்களிக்கும் முறையும்  
  • ஜனாதிபதி தேர்தல் தெரிவு முறைகள் - நேரடி தெரிவு 
  • ஜனாதிபதி தேர்தல் தெரிவு முறைகள் - 2ம்,3ம் முறை தெரிவு மூலம்
  • மீள் தேர்தலுக்கான சந்தர்ப்பங்கள்  
16 நவம்பர் 2019 இல் நடைபெற இருக்கும் 8வது ஜனாதிபதி தேர்தல் தற்போது மும்முனை போட்டி  எனவும்   உறுதியாகியுள்ளது.  இத்  தேர்தலிலே  களமிறங்கும் முன்னணி போர்ட்டியாளர்களாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச  பொதுஜன பெரமுனையிலும், அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியிலும், ஜேவிபி யின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க ஜேவிபியிலும் போட்டி இடுவார்கள் என்பதும்  உறுதியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் 35 வருட கால  சரித்திரதில்லேயே  இம் முறை நடை பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலே  முறையான   மும் முனை போட்டியாக அமைய உள்ளதாகவும்  ஆய்வாளர்கள்   கருதுகின்றனர்.

பிந்திய ஜனாதிபதி தேர்தல் கள  நிலவரம் 

8வது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அண்மிக்க தேர்தல் கள நிலைமைகளும்  பல மாற்றங்களையும் காண ஆரம்பித்துள்ளது   அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் என அறிவித்ததை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐ.தே. கட்சியில் இருந்து ஏற்கனவே வெளியேறியவர்களை உள்வாங்குதல் மற்றும் எஞ்சியுள்ள கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கையில் ஈடுபடுவதற்கான முயற்சி என தீவிரமாக தேர்தல் நடவடிக்கைகளில் இறங்கியும் உள்ளனர் .

அதேவேளை தற்போதைய ஜனாதிபதி மைத்திரியின் சுதந்திர முன்னணியிற்கும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பொதுஜன பெரமுனைக்கும் இடையில் உடன்படிக்கை சாத்திடும் அளவிற்கு  ஆமைவேகத்தில் சென்று கொண்டிருந்த பேர்ச்சுவார்தை தற்போது பல திடீர் திருப்பங்களையும்  அடைந்துள்ளது. அதாவது 2018 உள்ளுராட்சி தேர்தலில் 15 இலட்சம் ( 14,97,234 ) வாக்குகளை பெற்ற சுதந்திர கட்சியின் வாக்கே வது ஜனாதிபதியை தீர்மாணிக்கும் சக்தியாக தற்போது மாற்றம் கண்டுள்ளதால்  ஜனாதிபதி மைத்திரியும்   8வது  ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய புள்ளிகளில் ஒருவராக   தோன்றுகின்றார் .

நிலைமையை நன்கு அறிந்த ஐக்கிய தேசிய கட்சியினர் யாவரும் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த பல நாட்களாக ஜனாதிபதி மைத்திரியுடன்  பேச்சுவார்தைகளிலும் ஈடுபட்டும் வருகின்றனர் . மேலும் ஐ.தே.கட்சியை பொறுத்தளவில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திர கட்சியிற்கு அளிக்கப்பட 15இலட்சம் வாக்குகளும் மிக இலகுவான  முறையில் கோத்தா - மஹிந்தவின் பொதுஜன பெரமுனைக்கு செல்லப்போவதில்லை என்பதும் நன்கு தெரிந்துள்ள. ஐ .தே .கட்சியினரின் இம் முயற்சியானது  முதலாவதாக அவ்வாக்குகளில் பெரும் பகுதியை தம்வசம் இழுப்பதற்கும் மற்றும் எஞ்சியுள்ள வாக்குகளில் பெரும் பகுதியை கோத்தபாயாவிற்கு செல்லாது தடுப்பதற்குமான ஒரு யுக்தியுமாக   நாம் பார்க்கின்றோம். மேலும் இம் முயற்சியில் ஐ .தே. கட்சி வெற்றி பெற்றால் அவர்களுடைய ஜனாதிபதி வேப்பாளர் வெல்லுவதற்குரிய வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

இதன் மறுபக்கத்தில் கோத்தா - மஹிந்தவின் பொதுஜன பெரமுனைய கடந்த 2018 உள்ளுராட்சி தேர்தலில் 50இலட்சம் (50,06,837)அளவிலான வாக்குகளை பெற்ற வேளையில் மேலும் சுதந்திர கட்சியின் 15 இலட்சம் வாக்குகளில் 80% அளவிலான வாக்குகளை பெறுகின்ற பட்சத்தில் அவர்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. பொதுஜன பெரமுனையின் நிலைமையும் இவ்வாறு இருப்பதனால் அவர்களும் விடாபிரயத்தனத்தில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாக தென்படுகின்றன. இதனை நன்கு அறிந்துள்ள ஜனாதிபதி மைத்திரி இச் சந்தர்ப்பத்தை தனக்கு கூடிய அளவு நன்மையளிக்கும்   முறையில்  உபயோகிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் நிலைமையை வைத்து பார்க்கும் போது  தற்போதைய நிலைமைகளில்   ஜனாதிபதி மைத்திரி தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் செல்வாக்குள்ள மனிதராக மாறியுள்ளார்.

  • மக்கள் செல்வாக்கு உள்ள ஜே.வி.பி மூன்றாவது அணியாக....

குறிப்பாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி  தேர்தலில் ஜே.வி.பி யினர் 7 இலட்சத்திற்கும் அதிகமான  ( 710,932) வாக்குகளை பெற்றதாலும் வது ஜனாதிபதி தேர்தலின் தற்போதைய  கள  நிலவரங்களை  வைத்து பார்க்கும் போது வெற்றியாளரை தெரிவு செய்வது என்பது   ஒரு நீண்ட பொறிமுறையாக அமையலாம்  எனவும் கருதப்படுகின்றது. சந்தர்ப்பங்கள் இவ்வாறு உள்ள நிலையில் ஊடகங்களாகிய எமக்கும் வாக்களிப்பு முறையையும் மற்றும் ஜனாதிபதி  தேர்தல் முறையில் உள்ள தெரிவு முறைகளையும்  வாக்காளர்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய  கடமைப்பாடும்  உள்ளது  .

அந்த வகையில் நவம்பர் 16 யில்  நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் 15,992,094 போர் தகுதியுடையவர்களாக இருந்தாலும். நாம் பல உதாரணங்களின் ஊடாக இம் முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறையையும், மற்றும் இத்  தேர்தலில்  வெற்றியாளர் எவ்வாறான  பொறிமுறைகளின் மூலம் தெரிவாகலாம்  என்பதையும்  பல உதாரணங்களின்  ஊடாகவும்    தெளிவுபடுத்துகின்றோம் 

மாதிரி வாக்குச்சீட்டும் வாக்களிக்கும் முறையும்
& வாக்குச்  சீட்டு 
வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் போது அவர்களுக்கு பின்வரும் தெரிவுகள் உள்ளது

1). ஒரு குறிப்பிட்ட வேட்ப்பாளருக்கு மட்டும் வாக்களிக்கலாம்

அல்லது 

2).  தான் விரும்பும் முதலாவது வேட்பாளருக்கு 1 என்றும் அல்லது X என்றும் , தனது அடுத்த விருப்பு வேட்பாளருக்கு 2 என்ற இலக்கத்தையும்  இடலாம். இதன் மூலம் தனது முதலாவது விருப்பு ஜனாதிபதி வேட்ப்பாளர் தோல்விகாணும் பட்சத்தில் அதே வேளை குறிப்பிட்ட தேர்தலில் முதலாவது நேரடி தெரிவில் எந்த ஒரு வேட்ப்பாளரும்  50% வாக்குகளை பெறாத பட்சத்தில் குறிப்பிட்ட வாக்காளரின் 2 வது தெரிவும் கவனத்தில் கொள்ளப்படும்.

அல்லது 

3).தான் விரும்பும் முதலாவது வேட்ப்பாளருக்கு என்றும் அல்லது X என்றும் , தனது அடுத்த விருப்பு வேட்ப்பாளருக்கு 2 என்ற இலக்கத்தையும், தனது 3வது விருப்பு வேட்ப்பாளருக்கு 3 என்ற இலக்கத்தையும்  இடலாம். இதன் மூலம் தனது முதலாவது மற்றும் 2வது விருப்பு ஜனாதிபதி வேட்ப்பாளர்கள்  தோல்விகாணும் பட்சத்தில் அதே வேளை குறிப்பிட்ட தேர்தலில் முதலாவது நேரடி தெரிவில் எந்த ஒரு வேட்ப்பாளரும்  50% வாக்குகளை பெறாத பட்சத்தில் குறிப்பிட்ட வாக்காளரின்  தெரிவும் 3 வது  தெரிவும் கவனத்தில் கொள்ளப்படும்.


உதாரணமாக இத் தேர்தலில் மொத்தமாக 5 போட்டியாளர்கள் போட்டியிடுவதாகவும் அவர்கள் முறையே A,B,C,D,E என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் . ஒரு குறிப்பிட்ட  வாக்காளர் தனது ஜனாதிபதி தெரிவாக வேட்பாளர் C ஐயும்  மற்றும் அதே வாக்காளர் இம் முறை தேர்தலின் தன்மையை அறிந்து  தனது ஜனாதிபதி  வேட்பாளர் C தெரிவுசெய்யப்படாத பட்சத்தில்  அவர் தனது 2வது  ஜனதிபதி வேட்பாளர் தெரிவாக D ஐ யும், அவரும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பற்றுப்போகும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அவ் வாக்காளர் தனது இறுதியும் 3வது மான  தெரிவாக ஜனாதிபதி வேட்பாளர்   A ஐ யும் தெரிவு செய்கின்றார். இப்படியான ஒரு  சந்தர்ப்பத்தில் அவர் பூர்த்தியாக்கும்  வாக்கு சீட்டும் இவ்வாறு அமையும் 

               வாக்குச்  சீட்டு


ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள்  உதாரணங்களுடன் 

(ஜனாதிபதி தேர்தல் தெரிவு முறைகள் - நேரடி தெரிவு) 


உதாரணம் - 1)

                    போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் 
   போட்டியாளர்                             அளிக்கப்பட்ட வாக்குகள் 
               A                                                        6,600,000
               B                                                        5,800,000
               C                                                           500,000
               D                                                             60,000
               E                                                             40,000

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 15,900,000
அளிக்கப்பட்ட வாக்குகள் -  13,100,000
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  - 100,000
செல்லுபடியான வாக்குகள்  - 13,000,0000

போட்டியாளர் A 50% அதிகமாக பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை  100,000


போட்டியாளர் A ஏனைய 4 போட்டியாளர்களையும்  விட அதிகமான வாக்குகளையும் பெற்றும் மற்றும் 50.77% வாக்குகளையும் பெற்றதால் உதாரணத்தின் படி A ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்படுவார்.

ஜனாதிபதி தேர்தல் தெரிவு முறைகள் - 2ம்,3ம் முறை தெரிவு மூலம்

(2ம், 3ம் வாக்குகள் தெரிவின் மூலம் தெரிவாகும் ஜனாதிபதி ) 
உதாரணம் - 2)


போட்டியாளர்          அளிக்கப்பட்ட வாக்குகள்          
                                                         முதல் சுற்று 
                A                                            6,400,000                          
                B                                            6,000,000                          
                C                                               500,000                            
                D                                                 60,000                          
                E                                                 40,000                          



பதிவு செய்யப்பட்ட வாக்குகள் - 15,900,000
அளிக்கப்பட்ட வாக்குகள் -  13,100,000
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  - 100,000
செல்லுபடியான வாக்குகள்  - 13,000,0000

எமது உதாரணத்தின் படி
போட்டியாளர்கள் எவரும் 50% த்திற்கு அதிகமான புள்ளியான 6,500,001 வாக்குகளை பெறாததால் தேர்தலின் முடிவானது 2ம், 3ம் தெரிவிற்கு செல்கின்றது

போட்டியாளர்கள் எவரும்  இத் தேர்தலில் அளிக்கப்பட செல்லுபடியான வாக்குகளில் 50%ஐ பெறாததால் முதல் இரு இடங்களை பெறும் போட்டியாளர்கள் தவிர்த்த அனைவரும் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். மேலும் விலக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு வாக்களித்தவர்களில் தமது 2 வது 3வது தெரிவாக  முதல் 2 இடங்களை பெற்றவர்களுக்கு வாக்களித்து இருப்பார்களே ஆனால்  அவை  முறையே முதல் இரு போட்டியளர்களுக்கும் சேர்க்கப்பட்டு அதன் பின்பு முதல் இரு போட்டியளர்களில் எவராவது   50% ற்கும்  அதிகமான வாக்குகளை பெறும்  பட்சத்தில் அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார்.

மேலும் எமது உதாரணத்தின் படி  போட்டியாளர்கள் எவரும் 50% ற்கு மேலான வாக்குகளை பெறாததால் மற்றும் போட்டியாளர்கள் A யும்  B யும் முறையே 1ம், 2ம் இடங்களை பெற்றதால். போட்டியாளர்கள் C,D மற்றும் E ஆகியோர் போட்டியில்  இருந்து விலக்கப்படுவார்கள். அதே வேளை போட்டியாளர்கள் C,D,E ஆகியவர்களுக்கு   வாக்களித்த வாக்காளர்களில் தமது 2வது ஜனாதிபதி தெரிவுக்கும்  வாக்களித்து இருந்தால், அதாவது போட்டியாளர்கள் A அல்லது B2வது  ஜனாதிபதி தெரிவாக தெரிவு செய்து இருந்தால். அவை  தற்போது  முறையே A மற்றும் B ஆகிய போட்டியாளர்கள் ஏற்கனவே பெற்றிருந்த வாக்குகளுடன் சேர்க்கப்படும்.


போட்டியில் இருந்து விலக்கப்பட்ட போட்டியாளர்கள் ஆகிய C,D,E ஆகியோரின் 2வது  தெரிவு வாக்குகள் முறையே  A மற்றும் B ஆகிய முதல் இரு போர்ட்டியாளர்கலின்  வாக்குகளுடன்  எமது உதாரணத்தின் படி சேர்க்கப்பட்டுள்ளது .

அத்தோடு C,D,E ஆகிய போட்டியாளர்களுக்கு தமது  முதல் தெரிவாக  வாக்குகளை அளித்த வாக்காளர்கள் தமது இரண்டாவது   தெரிவாக A அல்லது   B க்கு தமது வாக்குகளை அளிக்கும் போது அந்த வாக்குகள்  போட்டியாளர்கள் C,D,E இல் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு முறையே போட்டியாளர்கள் A உடனும் போட்டியாளர் B உடனும் சேர்க்கப்பட்டும்  உள்ளது  .

C,D,E இற்கு அளித்த வாக்காளர்களில் தமது 2ம் தெரிவாகவும் C,D,E இற்கேயே  அளித்தவகையிலும் மேலும் இவர்களில் எவராவது இறுதியாக   தமது மூன்றாவது தெரிவாக போட்டியாளர் A அல்லது B க்கு தமது வாக்குகளை அளித்திருந்தால்  அந்த வாக்குகளும் போட்டியாளர்   A மற்றும் போட்டியாளர் B   உரிய வாக்குகளுடன்  சேர்க்கப்படும்.

இதனை கீழுள்ள உதாரணத்தின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்




உதாரணம் 2யின் படி போட்டியாளர் Aஇற்கு அளிக்கப்பட வாக்குகளோடு மேலதிகமாக  2ம்,3ம்   தெரிவு வாக்குகளுடன் சேர்த்து 6,635,000 வாக்குகளை பெறுவதனால். அவருடைய மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 51.03% ஆகுவதனாலும் மேலும் அவர் 50% மேலாக 135,000 வாக்குகளை பெறுவதாலும் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

1ம், 2ம் போட்டியாளர்களுக்கு இடையேயான மீள்  தேர்தல் 

முதலாவது கணிப்பில் 1ம், 2ம் இடங்களைப்பெறும் தேர்தலில் அளிக்கப்பட செல்லுபடியான வாக்குகளில்  50%தை  பெறாத பட்சத்தில் 1ம், 2ம் இடம்களை பெற்றவர்கள் தவிந்த மற்றைய போட்டியாளர்கள் தேர்தலில் இருந்து விலக்கப்படுவதோடு அவர்களுக்கு அளித்த வாக்காளர்களில் 2ம்,3ம் தெரிவாக முதல் 2 போட்டியாளர்களுக்கும் வாக்குகள் அளிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அவையும் சேர்க்கப்படும் மேலும் அவ்வாறு சேர்க்கப்பட்டும் முதல் இரு போர்ட்டியாளர்களில் எவரும் 50% புள்ளியை அடையாவிடின் இறுதியாக முதல் இரு போட்டியாளர்களுக்கும் இடையே மீள் தேர்தல் நடைபெற்று இவ் இரு போட்டியாளர்களில் யார்  அதி கூடுதலான வாக்குகளை பெறுகின்றாரோ அவர்  8வது ஜனாதிபதி தேர்தலின் மூலம் தெரிவாகும் ஜனாதிபதியும் ஆவார்  .

தேர்தலுக்குரிய காலம் நெருங்குகின்ற வேளையில் குறிப்பாக இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் மிகவும் ஒரு இறுக்கமான தேர்தலாக அமைய உள்ளதால் தேர்தல் களத்தில் ஏற்படும் ஒவ்வொரு  சிறிய மாற்றமும் இரு முன்னனி வேட்ப்பாளருக்கும் இடையேயான வெற்றிபெறும் சந்தர்பங்களிலும் மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பதும்  தெளிவாக தென்படுகின்றது. மேலும் தேர்தலுக்கு இன்னும் 6 வாரங்கள் வரை உள்ள வேளையில் இரு முன்னணி வேட்பாளர்களில்  எவரும் வெற்றியாளராகலாம் என்பதே தற்போதைய கள நிலவரங்களை  வைத்து பார்க்கும் போது   யதார்தமாகவுள்ளது.