கடலில் நீராடச் சென்று காணாமல் போன மாணவன் இரு தினங்களில் பின் கடற்கரையில் சடலமாக இன்று மீட்பு

 -சரவணன்--

மட்டக்களப்பு களுவாஞ்சக்குடி கடலில் நீராடச் சென்று காணாமல்போன மாணவன் இரண்டு தினங்களின் பின்னர் இன்று வியாழக்கிழமை (10) கிரான்குளம் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம்  டிலாஞ்சன்  என்ற மாணவன் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி கடலில் 4 நண்பர்களுடன் நீராடச் டிசன்ற நிலையில் கடல் அலையால் இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவனை கடலில் கடந்த இரு தினங்களாக தேடிவந்த நிலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் கடற்கரையில் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில்  சடலம்  கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசார் குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக  மட்டு போதனா வைத்தியசாலையில் ஓப்படைத்துள்ளனர்

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர் .