நள்ளிரவுமுதல் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்


சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் 251 ரூபாயினாலும் 5 கிலோகிராம் சிலிண்டரின் விலையும் 95 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளன.