அறுபது போத்தல் வடிசாராயத்தினை வைத்திருந்த நபர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம்திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அறுபது போத்தல் வடிசாராயத்தினை வைத்திருந்த நபர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று(18) உத்தரவிட்டார்.

கும்புறுப்பிட்டி,குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் குச்சவெளி பகுதியில் வடிசாராயம் விற்பனை செய்துவருவதாக குச்சவெளி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அறுபது போத்தல் வடிசாராயத்துடன் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.