அம்பாறை மாவட்டத்தில் கருவாடு உற்பத்தி அதிகரிப்பு !

(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளது

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,நாவிதன்வெளி ,13 ஆம் கொலனி, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி ,சாய்ந்தமருது, காரைதீவு ,நிந்தவூர் ,அட்டப்பளம் ,அட்டாளைச்சேனை, பிரதேசங்களில் கடல் கருவாடு விற்பனைக்கு அதிக கிராக்கி நிலவுகிறது.அதிகளவான மீன்பிடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கருவாட்டு உற்பத்தியில் அதீத ஆர்வம் அண்மைக்காலமாக காட்டி வருகின்றனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு மன்னார் மாவட்டம், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கடற்கருவாடுகள் வருவதாக விற்பனையாளர்கள் குறிப்படுகின்றனர்.பெரும்பாலும் பாரை காரல் நெத்தலி சுறா போன்ற மீன்கள் ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் எஞ்சியவைகள் உலர்த்தப்பட்டு கருவாடு உற்பத்தியும் மேற்கொள்ளப்படுகின்றது.

இதை விட குளத்து கருவாடுகளான செப்பலி,விரால்,கனையான்,சுங்கான் ,ஆகிய மீன் கருவாடுகளுக்கும் இப்பகுதியில் கிராக்கி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.