கொழும்பில் இருந்து அண்மையில் மட்டக்களப்பிற்கு வந்த நபர் ஒருவருடைய குடும்பம் தனிமைப்படுத்தப்படுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய்த் தடுப்புச் செயற்திட்ட த்தின் கீழ், வெளி மாட்டங்களில் இருந்து மட்டு. மாவட்டத்துக்குள் வருவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையினை பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் பகுதியில் வசித்து வரும் குடும்பம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து அண்மையில் மட்டக்களப்பிற்கு வந்த நபருடைய குடும்பமே கொரோனா தனிமைப்படுத்தல் பிரிவினால் இவ்வாறு வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் வெளியில் வராத வாறு வைக்கப்பட்டுள்ளனர்.

வாவிக்கரை வீதியில் குறித்த நபருடைய குடும்பம் வசித்து வரும் நிலையில் அவர்கள் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.