நாவிதன்வெளி பிரதேசத்தில் தொற்றுநீக்கி விசுறும் பணி முன்னெடுப்பு !.

(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேசத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று நீக்கி விசிறும் பணி நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதனின் மேற்பார்வையில் நாவிதன்வெளி பிரதேச செயலகம், சவளக்கடை பொலிஸ் நிலையம், பஸ் தரிப்பிடம், சுகாதார வைத்திய அதிகாரி காரியலாயம் ஆகியவற்றில் பொது மக்கள், உத்தியோகத்தர்கள் பயன்படுத்தும் பகுதிகளை தொற்று நீக்கி விசிறி சுத்தம் செய்யப்பட்டது.

இதில் மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர், கள பொதுசுகாதார பரிசோதகர்கள், சுகாதார ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.