மட்டக்களப்பில் இரண்டாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டுள்ளார் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அறிவிததுள்ளது.

மட்டக்களப்பு ரிதிதென்ன தடுப்பு முகாமில் இருந்த 59வயதுடைய நபரே கொரோனா தொற்றுக்குள்ளானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.