தம்புள்ளைக்கு செல்லத் தடை !

(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வியாபாரிகள், தம்புள்ளைக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுத் தொடர்பான விசேட கூட்டமொன்று, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் தலைமையில், புதன்கிழமை (1) இடம்பெற்றது.

குறித்த பிரதேசத்திலிருந்து அநேகமான வர்த்தகர்கள், தம்புள்ளைப் பகுதிக்குச் சென்று, மரக்கறிகளைக் கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தம்புள்ளைப் பகுதிக்குச் சென்று வருவதால், கொரோனா வைரஸ் தொற்று பரவலாம் என்ற சந்தேகத்தில், இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தடையுத்தரவை மீறி தம்புள்ளைப் பகுதிக்குச் செல்வோர்கள் மீது, கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, குறித்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், பிரதேசசபை செயலாளர், வர்த்தக சங்க தலைவர், வியாபாரிகள் ஆகியோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்