'சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்' வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பித்து வைப்பு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
நாட்டின் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்' நேற்று வியாழக்கிழமை வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் உள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் முதற்கட்டமாக ஐநூறு குடும்பங்களுக்கு சௌபாக்கியா வீட்டுத் தோட்டத்திற்கான கத்தரி, மிளகாய், புசித்தாய், வெண்டி, போஞ்சி போன்ற ஐந்து வகை பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டதுடன், பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரஷீட்; தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பழமரக் கன்றுகளையும், மக்கறி வகைகளின் விதைகளையும் வழங்கி வைத்தனர்.