அநாவசிய அழுத்தம் கொடுத்தால் துண்டித்து விடுவோம்: கோட்டா எச்சரிக்கை!

(ஜே.எப்.காமிலா பேகம்)
சர்வதேச அமைப்புகள் அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வோம், என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போர் என்பது ரோஜா இதழ்கள் தூவிய மெத்தையல்ல எனவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்றையதினம் 11 ஆவது போர் வெற்றிதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.