தேர்தல் நடத்த முடியும்: டாக்டர் அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு

(ஜே.எப்.காமிலா பேகம்)
தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகியிருக்கிற படியினால் அதற்கான சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

தேர்தல் திகதியைக் குறிப்பது எமது பொறுப்பல்ல. அது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை. அவர்களுக்கு உதவி செய்ய எமக்கு முடியும். நாடு தற்சமயம் வழமைக்குத் திரும்புகின்றது. தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை கேட்டால் அதனைவழங்க நாம் தயார் என்று இன்று காலை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் தெரிவித்தார்.