இராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவி உயர்வு


இராணுவ வீரர்கள் 71 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதற்கமைய, கேர்ணல் தரத்திலுள்ள 41 பேர் பிரிகேடியர்களாகவும், லெப்டினன்ட் கேர்ணல் தரத்திலுள்ள 30 பேர் கேர்ணல்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.